sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பயங்கரவாதிகள் 5 பேர் வீடு இடித்து தரைமட்டம்; காஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி

/

பயங்கரவாதிகள் 5 பேர் வீடு இடித்து தரைமட்டம்; காஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி

பயங்கரவாதிகள் 5 பேர் வீடு இடித்து தரைமட்டம்; காஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி

பயங்கரவாதிகள் 5 பேர் வீடு இடித்து தரைமட்டம்; காஷ்மீரில் ராணுவத்தினர் அதிரடி

17


ADDED : ஏப் 26, 2025 12:06 PM

Google News

ADDED : ஏப் 26, 2025 12:06 PM

17


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கினர்.



கடந்த 22ம் தேதி ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் என்ற இடத்தில், பாகிஸ்தான் ஆதரவு லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக, சந்தேகப்படும் பயங்கரவாதிகளின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தரைமட்டமாக்கி வருகின்றனர்.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் லஷ்கர்-இ-தொய்பா மூத்த தளபதி உட்பட 5 பேரின் வீடுகளை பாதுகாப்பு படையினர் இடித்து தள்ளினர். அந்த வகையில், ஷோபியனின் சோட்டிபோரா கிராமத்தில் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பு கமாண்டர் ஷாஹித் வீடு இடிக்கப்பட்டன.

இவர் 4 ஆண்டுகளாக பயங்கரவாதம் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். குல்காமில் மற்றொரு தீவிர பயங்கரவாதி வீடு இடிக்கப்பட்டது. ஏற்கனவே, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த அடில் ஹுசேன் தோகர் மற்றும் ஆசிப் ஷேக் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இவர்களில், தோகர், அனந்த்நாக் மாவட்டம்; ஷேக், புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us