உற்பத்தியே இல்லை பொருட்களை எப்படி வாங்குவது? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்
உற்பத்தியே இல்லை பொருட்களை எப்படி வாங்குவது? கேள்வி எழுப்பும் காங்கிரஸ்
ADDED : ஆக 27, 2025 03:01 AM

'நாடு முழுதும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் அழிந்து கிடக்கிற நிலையில், இந்திய பொருட்களை வாங்கும்படி மக்களிடம் கூறினால், அவர்களால் எப்படி முடியும்' என, காங்கிரஸ் விமர்சனம் செய்துள்ளது.
இது குறித்து டில் லியில், காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா நேற்று கூறியதாவது:
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்கா, 50 சதவீத வரி விதித்துள்ளது. இது, நம் நாட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவு.
இதற்கு பிறகு தான், 'மேக் இன் இந்தியா' என்ற கோஷத்தையும், இந்திய பொருட்களை வாங்குங்கள் என்ற பிரசாரத்தையும் கையில் எடுத்துள்ளனர்.
ஆனால், நாடு முழுதும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் நலிவடைந்துகிடக்கின்றன. அப்படி இருக்கையில், நம் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை மட்டுமே, மக்களால் எப்படி வாங்க முடியும்?
முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்தியாவின் வெளியுறவு கொள்கை சரிந்து கொண்டிருப்பதை அனைவரும் கவனித்துக் கொண்டுதான் உள்ளனர். அரசு இதற்கு என்ன பதில் தரப்போகிறது? இவ்வாறு, அவர் கூறினார்.
-நமது டில்லி நிருபர்-