
வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட முறைகேடுகள் காரணமாக கர்நாடகா, ஹிமாச்சல், தெலுங்கானா மாநிலங்களில் காங்., வென்றதா? தேர்தல் கமிஷனின் தவறால் தமிழகம், ஜார்க்கண்ட் மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைத்ததா? வாக்காளர் பட்டியலில் ஏற்பட்ட முறைகேடால் ராகுல், பிரியங்கா, அகிலேஷ் தேர்தல்களில் வெற்றி பெற்றனரா?
சிவ்ராஜ் சிங் சவுகான் மத்திய அமைச்சர், பா.ஜ.,
வருத்தம் ஏன்?
அசாம் அரசு சார்பில் ஊடுருவல்காரர்களை வெளியேற்றும் நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ள து . இந்த நடவடிக்கைக்கு, காங்கிரஸ் ஏன் வருத்தம் தெரிவிக்கிறது? நம் நிலத்தை இம்மக்கள் ஆக்கிரமித்து உள்ளனர். இது, நம் கலாசாரத்தை மாற்றும் முயற்சி. இதன் வாயிலாக மாநில மக்கள் ஏழ்மை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஹிமந்த பிஸ்வ சர்மா அசாம் முதல்வர், பா.ஜ.,
சந்தேகத்திற்கு தீர்வு!
நாடு முழுதும் வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த நடவடிக்கை தொடர்பாக எழும் சந்தேகங்களுக்கு விரைவில் தீர்வு காண வே ண்டும். அமெரிக்காவி ன் கூடுதல் வரி விதிப்பு பற்றியும் பார்லிமென்டில் முறையாக விவாதிக்க வே ண்டும். நாட்டு மக்களின் நலனைக் கருதி, பொருளாதார பாதிப்புகளை தடுக்க வேண்டும்.
மாயாவதி தலைவர், பகுஜன் சமாஜ்

