சரத்பவார் உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல்
சரத்பவார் உடல்நிலை எப்படி உள்ளது? மருத்துவமனை நிர்வாகம் புதிய தகவல்
ADDED : நவ 03, 2026 04:14 PM

புனே; தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உடல்நிலை சீராக உள்ளது. ஓரிரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்து உள்ளது.
நெஞ்சுவலி காரணமாக, சரத்பவார் புனேவில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளியாகி வண்ணம் இருந்தால் தேசியவாத காங். தொண்டர்கள் கவலையில் ஆழ்ந்தனர்.
தற்போது, அவரது உடல்நிலை பற்றிய முக்கிய விவரம் ஒன்றை மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டு உள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது;
சரத்பவாருக்கு மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் குழு சிகிச்சை அளித்து வருகிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. அவருக்கு உடலில் ஏற்பட்ட அசவுகரியங்கள் குறைந்துவிட்டன. இன்னும் ஓரிரு நாளில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். எப்போது என்பது விரைவில் அறிவிக்கப்படும்.
இவ்வாறு மருத்துவமனை நிர்வாகம் கூறி இருக்கிறது.
