தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/எந்த மாநிலத்துக்கு எத்தனை எம்.பி.,க்கள்!

எந்த மாநிலத்துக்கு எத்தனை எம்.பி.,க்கள்!

எந்த மாநிலத்துக்கு எத்தனை எம்.பி.,க்கள்!


ADDED : நவ 28, 2026 02:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 02:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது சிறப்பு நிருபர் -

தொகுதி மறுவரையறை மசோதாவை வரும் லோக்சபா கூட்டத்தில் அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. புதிய மசோதாவின்படி, ஒவ்வொரு மாநிலத்திலும் தற்போது இருக்கும் எம்.பி.,க்களின் எண்ணிக்கையில் இருந்து, அப்படியே 50 சதவீதம் கூடுதலாக்கப்படும். அதாவது, ஏற்கனவே இருக்கும் 543 என்ற எண்ணிக்கை, 816 ஆக அதிகரிக்கப்படும். ஒவ்வொரு மாநிலத்திலும் எத்தனை எம்.பி.,க்கள் இருப்பர் என்பது பற்றிய விவரம் வருமாறு:

மாநிலம் - தற்போதைய எம்பி.,- மசோதாவுக்கு பிறகு

* உ.பி.,- 80- 120

* ராஜஸ்தான்-25- 38

* பீஹார் - 40- 60

* ம.பி., 29 - 43

* குஜராத் - 26- 39

* மஹாராஷ்டிரா - 48- 72

* தெலுங்கானா - 17 -26

* ஆந்திரா - 25- 38

* தமிழகம் - 39- 59

* சத்தீஸ்கர் - 11- 16

* மேற்கு வங்கம் - 42- 63

* கர்நாடகா - 28- 42

* கேரளா - 20- 30

* பஞ்சாப் - 13 - 20

* ஹிமாச்சல் - 4- 6

* உத்தரகண்ட் - 5 - 8

* ஒடிஷா - 21 - 31

* அசாம் - 14 - 21

* ஜார்க்கண்ட் -14- 21

* அருணாச்சல் - 2 -3

* சிக்கிம் - 1 - 2

* திரிபுரா - 2 - 3

* மேகாலயா - 2 - 3

* மிசோரம் - 1 - 2

* நாகாலாந்து - 1 - 2

* மணிப்பூர் - 2 - 3

* கோவா - 2 - 3

* டில்லி - 7 - 11

* ஹரியானா - 10 - 15

* ஜம்மு காஷ்மீர் - 5 - 7

* லடாக் - 1 - 1

* புதுச்சேரி - 1 - 2

* டாமன் டையூ - 2 - 2

* சண்டிகர் - 1 - 2

* அந்தமான் நிக்கோபார் - 1 - 1

* லட்சத்தீவுகள் - 1 - 1

முக்கிய மைல்கல்!

மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் வெளியிட்ட பதிவில், '' மத்திய அமைச்சரவை, தொகுதி மறுவரையறை திருத்த மசோதாவிற்கு ஒப்புதல் அளித்திருப்பது, இந்தியாவின் அரசியல் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். லோக்சபா இடங்களை 50 சதவீதம் அதிகரிப்பதன் மூலம், பார்லிமென்டில் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது.
1971ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் லோக்சபா எம்பிக்கள் எண்ணிக்கை 543 என்ற எண்ணிக்கையில் தேக்கமடைந்து இருந்தது. அதே காலகட்டத்தில் இந்தியாவின் மக்கள் தொகை கிட்டத்தட்ட மூன்று மடங்காகி, 140 கோடியைத் தாண்டியுள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா மிகப்பெரிய மாற்றங்களைக் கண்டுள்ளது. மக்கள் தொகை அதிகரித்துள்ளது, புதிய நகரங்கள் உருவாகியுள்ளன,
குடிமக்களின் தேவைகளும் மாறியுள்ளன. அப்படியிருக்க, நமது அரசியல் பிரதிநிதித்துவமும் இந்த மாற்றங்களை வெளிப்படுத்த வேண்டாமா? 2029ம் ஆண்டு நடைபெறவுள்ள லோக்சபா தேர்தலில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கிடைப்பதற்கு உறுதி செய்வோம். பெண்களின் பங்களிப்பு அதிகரிப்பதோடு, வலுவான தலைமைத்துவமும், அனைவரையும் உள்ளடக்கிய அரசியல் சூழலும் உருவாகும்'' என குறிப்பிட்டுள்ளார்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us