சுனிதாவின் ‛‛ரிட்டர்ன்''; நாசாவுக்கு மானம் போச்சு; போயிங்குக்கு பணம் போச்சு!
சுனிதாவின் ‛‛ரிட்டர்ன்''; நாசாவுக்கு மானம் போச்சு; போயிங்குக்கு பணம் போச்சு!
ADDED : ஆக 07, 2024 05:05 PM

புதுடில்லி: தொழில்நுட்ப காரணங்களால், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து, சுனிதா வில்லியம்ஸ் பூமிக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் நாசாவிடம் பயண ஒப்பந்தம் பெற்று, விண்கலம் அனுப்பிய போயிங் நிறுவனத்துக்கு ரூ.1,049 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த விமான தயாரிப்பு நிறுவனமான போயிங் ஸ்டார்லைனர் ராக்கெட் மூலம் சர்வதேச விண்வெளி மையத்துக்கு இந்திய வம்சாவளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 58, புட்ச் வில்மோர், 61, ஆகியோர் ஜூன் 5ம் தேதி பயணம் மேற்கொண்டனர். ஜூன் 06ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையம் சென்றடைந்தனர்.
50 நாட்களுக்கு மேல்!
9 நாட்கள் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து ஆய்வுகள் நடத்தினர். திரும்பி வருவதற்கான ஏற்பாடுகள் செய்தபோது, விண்கலத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமி திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டது.
திட்டமிட்டபடி, ஜூன் 22ம் தேதி பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். கோளாறை சரி செய்ய முடியாத நிலையில், இருவரும் பூமிக்கு திரும்புவது ஒத்திவைக்கப்பட்டது. தொடர்ந்து இருவரும் 50 நாட்களுக்கு மேல் விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ளனர்.
நஷ்டம்
இதனால் நாசாவிடம் பயண ஒப்பந்தம் பெற்று, விண்கலம் அனுப்பிய போயிங் நிறுவனத்துக்கு ரூ.1,049 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிக நாட்கள் விண்வெளியில் தங்கியிருப்பதால் சுனிதா வில்லியம்சிற்கு எடையிழப்பு, தசை மற்றும் எலும்பு அடர்த்தி இழப்பு போன்ற பிரச்னைகள் நேரிடலாம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.