sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கொள்ளையடிக்க கோர்ஸ் நடத்துறாங்கப்பு.. ரூ.3 லட்சம் பீஸ்..! ம.பி.யில் வினோத கிராமங்கள்

/

கொள்ளையடிக்க கோர்ஸ் நடத்துறாங்கப்பு.. ரூ.3 லட்சம் பீஸ்..! ம.பி.யில் வினோத கிராமங்கள்

கொள்ளையடிக்க கோர்ஸ் நடத்துறாங்கப்பு.. ரூ.3 லட்சம் பீஸ்..! ம.பி.யில் வினோத கிராமங்கள்

கொள்ளையடிக்க கோர்ஸ் நடத்துறாங்கப்பு.. ரூ.3 லட்சம் பீஸ்..! ம.பி.யில் வினோத கிராமங்கள்

24


UPDATED : ஆக 21, 2024 10:46 AM

ADDED : ஆக 21, 2024 07:56 AM

Google News

UPDATED : ஆக 21, 2024 10:46 AM ADDED : ஆக 21, 2024 07:56 AM

24


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள கிராமங்களில், சிறார்களுக்கு கொள்ளைடிக்க ரூ. 3 லட்சம் கட்டணத்தில் பயிற்சி அளிப்பது அம்பலமாகியுள்ளது.

பயிற்சி


நுழைவுத்தேர்வில் வெல்ல பயிற்சி, வேலைக்கான நேர்முகத் தேர்வில் பயிற்சி என எவ்வளவோ விஷயங்களை பார்த்து இருப்போம். ஆனால் கொள்ளையடிக்க கற்றுக் கொள்ள பயிற்சி அளிக்கப்படுகிறது என்றால் நம்ப முடிகிறதா? மத்தியப்பிரதேச மாநிலத்தில் தான் அப்படி ஒரு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஒரு சிறு வித்தியாசம்... எப்படி கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்கு தான் இங்கு பயிற்சி தரப்படுகிறது.

கிராமங்கள்


ராஜ்கர் மாவட்டத்தில் கடியா, குல்கேடி,ஹல்கேடி என்ற கிராமங்களில் இந்த பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. தலைநகர் போபாலில் இருந்து 117 கி.மீ. தொலைவில் உள்ள இந்த கிராமங்களில் இந்த நிலை காணப்படுகிறது. 12 வயது சிறார்களுக்கு கொள்ளை, திருட்டு பயிற்சிகளை அவர்களது பெற்றோர்கள் அளிக்க ஏற்பாடு செய்கின்றனர்.

பயிற்சிக் கட்டணம்


பயிற்சிக்காக கைதேர்ந்த திருடர்கள், கொள்ளையர்கள் யார் உள்ளனர் என்பதை அறிந்து அவர்களிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை பணத்தை கட்டணமாக கொடுத்து பயிற்சிக்கு அனுப்புகின்றனர். அவர்களுக்கு பிக்பாக்கெட், செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளை, கூட்டமாக உள்ள விழாக்கள், கோயில்கள், திருமண நிகழ்வுகளில் எப்படி கொள்ளையடிப்பது என்பதை கற்றுத் தருகின்றனர்.

கைவரிசை


பயிற்சியும் கொடுத்து அவர்களை கொள்ளையடிக்க அனுப்பும் கொள்ளையர்கள், அதில் வரும் பணத்தில் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட ரூ.5 லட்சம் வரை கொள்ளைடியத்து தந்த சிறார்களின் பெற்றோர்களுக்கு வெகுமதியாக தருகின்றனர். இந்த கிராமங்களில் இருந்து அண்மையில் பயிற்சி பெற்ற ஒருவர் ஹைதராபாதில் தொழிலதிபர் இல்லத் திருமணத்தில் கைவரிசை காட்டி கிட்டத்தட்ட ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள். ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை அள்ளிச் சென்றிருக்கிறார்.

போலீசார் திணறல்


சம்பவத்தை கச்சிதமாக அரங்கேற்றிவிட்டு பணம், நகையுடன் சொந்த ஊரான கடியாவுக்கு எஸ்கேப் ஆகி உள்ளனர். பின்னர், அங்கிருந்து நேராக கன்வர் எனப்படும் சிவ யாத்திரையில் கலந்து கொண்டு, போலீசாரை திக்குமுக்காட வைத்துள்ளார்.

சவால்


சம்பந்தப்பட்ட கிராமங்களுக்குச் சென்று குற்றவாளிகளை பிடிக்கச் செல்வது போலீசாருக்கு சவால் நிறைந்த பணியாக இருக்கிறது. அன்னியர்கள் அல்லது காவல்துறை சம்பந்தப்பட்ட நபராக இருப்பின் அவர்களை செல்போன் கேமராவில் போட்டோ எடுத்து, ஊரில் உள்ள அனைவருக்கும் அனுப்பி உஷார்படுத்திவிடுகின்றனர். குறிப்பாக ஊருக்குள் இருக்கும் பெண்களுக்கு இது ஒரு தலையாய பணியாகவே ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

கல்வியறிவு


300க்கும் மேற்பட்ட சிறார்கள் பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று திருட்டு, கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளதாக கூறும் போலீசார், போதிய கல்வியறிவு இல்லாததே இதற்கு காரணம் என்றும் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us