ADDED : பிப் 06, 2025 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹொஸ்கோட்; பெங்களூரு ரூரல் தேவனஹள்ளி அருகே விஜயபுராவை சேர்ந்தவர் நிஜாமுதீன், 35; ஆட்டோ டிரைவர். இவரது மனைவி ரபியா, 32. தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். ரபியாவுக்கும், பக்கத்து வீட்டு வாலிபர் ஒருவருக்கும் இடையில் கள்ளக்காதல் ஏற்பட்டது. கணவர் கண்டித்தும், கேட்கவில்லை.
இதனால், எட்டு மாதங்களுக்கு முன் மனைவி, பிள்ளைகளுடன் ஹொஸ்கோட் அருகே சுலிபெலே கிராமத்திற்கு நிஜாமுதீன் சென்றார். அங்கு வாடகை வீட்டில் வசித்தனர். ரபியாவுக்கு, சுலிபெலே பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலருடனும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நிஜாமுதீன், நேற்று முன்தினம் இரவு ரபியாவை கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின், சுலிபெலே போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரை கைது செய்து, ோலீசார் விசாரிக்கின்றனர்.