மனைவிக்கு தொல்லை கொடுத்த நண்பரை வெட்டிய கணவர் கைது
மனைவிக்கு தொல்லை கொடுத்த நண்பரை வெட்டிய கணவர் கைது
ADDED : பிப் 06, 2025 10:58 PM
தலகட்டபுரா: தலகட்டபுராவை சேர்ந்தவர் அர்ஜுன்; கார் ஓட்டுநர். இவருக்கு ஓராண்டுக்கு முன், மற்றொரு கார் ஓட்டுநர் கிரண் என்பவர் அறிமுகமானார். இருவரும் நண்பர்களாகினர். அவ்வப்போது அர்ஜுன் வீட்டுக்கு கிரண் வந்து சென்றுள்ளார்.
கடந்த சில மாதங்களாக, அர்ஜுன் மனைவியிடம் கிரண் போன் செய்து பேசி வந்துள்ளார். அத்துடன் வாட்ஸாப்பிலும் குறுந்தகவல்கள் அனுப்பி வந்துள்ளார். இது தொடர்பாக, தனது கணவரிடம் அவர் தெரிவித்து உள்ளார். கிரணை அர்ஜுன் கண்டித்தார். ஆனாலும் தொடர்ந்து வாட்ஸாப்பில் மெசேஜ்கள் அனுப்பியுள்ளார்.
இதனால் கோபம் அடைந்த அர்ஜுன், பிப்., 4ம் தேதி, மது அருந்த செல்லலாம் என்று கூறி, கிரணை அழைத்து சென்றார். மது அருந்திய பின், கனகாரபாளையா அருகே நடந்து வரும் போது, தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால், கிரண் கழுத்தில் வெட்டிவிட்டு தப்பியோடி விட்டார்.
இதை பார்த்த அப்பகுதியினர், கிரணை மருத்துவமனையில் சேர்த்தனர். கிரணின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், தலகட்டபுரா போலீசார் விசாரணை நடத்தினர். தலைமறைவாக இருந்த அர்ஜுனை, கைது செய்தனர்.