ADDED : பிப் 19, 2024 06:56 AM

காமாட்சிபாளையா,
நடத்தை சந்தேகத்தால் காதல் மனைவியை கத்தியால் குத்திய, கணவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு, காமாட்சிபாளையா சுங்கதகட்டேயில் வசிப்பவர் ஜெயபிரகாஷ், 32. இவரது மனைவி திவ்யஸ்ரீ, 29. இருவரும் காதலித்து, கடந்த 2019 ல் திருமணம் செய்தனர். கடந்த சில மாதங்களாக, திவ்யஸ்ரீ இரவில் யாரிடமோ, மொபைல் போனில், அடிக்கடி பேசி வந்தார்.
இதனால் அவர் நடத்தையில், கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. தம்பதிக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டது.
இந்நிலையில் சமீபத்தில் ஜெயபிரகாஷின் தங்கைக்கு, நிச்சயதார்த்தம் நடந்தது.
இதில் திவ்யஸ்ரீ கலந்து கொள்ளவில்லை. வேண்டும் என்றே நிச்சயதார்த்தத்தை புறக்கணித்ததாக கூறி, மனைவியிடம், கணவர் பிரச்னை செய்தார்.
நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில், திவ்யஸ்ரீயை கத்தியால் குத்திவிட்டு, ஜெயபிரகாஷ் தப்பி விட்டார். உயிருக்கு போராடியவரை மீட்டு, அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அனுப்பினர். தப்பி ஓடிய ஜெயபிரகாஷை, காமாட்சிபாளையா போலீசார் கைது செய்தனர்.

