ADDED : செப் 21, 2024 10:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மைக்கோ லே - அவுட்: மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவான கணவரை, போலீசார் தேடுகின்றனர்.
பெங்களூரின், பி.டி.எஸ்., லே - அவுட்டில் வசிப்பவர் சையத் ஜமீர், 45. இவர் பெயின்டிங் வேலை செய்கிறார். இவரது மனைவி சையத் சமீரா, 40. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சில நாட்களாக குடும்ப பிரச்னையால், தம்பதிக்கு இடையே தகராறு நடந்தது. நேற்று முன் தினம் இரவு 11:00 மணியளவில் தம்பதிக்கு வாக்குவாதம் நடந்தது. அப்போது கோபமடைந்த சையத் ஜமீர், துப்பட்டவால் மனைவியின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார்.
சமீராவின் சகோதரர், மைக்கோ லே - அவுட் போலீசாரிடம் புகார் செய்தார். போலீசார், கொலையாளியை தேடி வருகின்றனர்.