ADDED : ஆக 11, 2025 06:34 AM
அமேதி : உத்தர பிரதேசத்தில், குடும்ப தகராறில் கணவரின் அந்தரங்க உறுப்பை அவரது மனைவி துண்டித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அமேதி மாவட்டத்தில் பசன்கஞ்ச் கச்னாவ் கிரா மத்தை ச் சேர்ந்தவர், அன்சர் அஹமது, 38.
இவருக்கு, சபேஜுல் என்ற பெண்ணுடன் திருமணம் நடந்த நிலையில், நஸ்னீன் பனோ என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்தார். இரு மனைவியருடன் அன்சர் சே ர்ந்து வாழ்ந்து வந்தார். ஆனால், குழந்தைகள் இல்லை.
குடும்பம் நடத்துவது தொடர்பாக அவ்வப்போது, இரு மனைவியருடனும் அன்சர் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
வழக்கம்போல், நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு அன்சர் வீட்டுக்கு திரும்பினார். அப்போது, இரண்டாவது ம னைவி நஸ்னீன் பனோ அவருடன் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
வாக்குவாதத்தில் துவங்கிய சண்டை, ஒரு கட்டத்தில் கைகலப்பாக மாறியது. இறுதியில், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, அன்சரின் அந்தரங்க உறுப்பை நஸ்னீன் வெட்டினார். இதனால், அலறி துடித்த அன்சரை, அக்கம்பக்கத்தினர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், மேல் சிசிக்சைக்காக, ரேபரேலியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார். நஸ்னீன் பனோவிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.