ADDED : ஆக 11, 2025 06:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார் : திருக்கனுார், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் குபேந்திரன், 53. இவர் நேற்று காலை 5:00 மணி அளவில் உடல்நிலை பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதையடுத்து, அவரது மனைவி லலிதா, மகன்கள் பரணிதரன், சேதுபதி மற்றும் குடும்பத்தினர் இறந்த குபேந்திரனின் கண்களை தானமாக வழங்க முடிவு செய்தனர்.அதன்படி, திருக்கனுார் கோவில் நகரம் லயன் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செந்தில்வேலன் ஏற்பாட்டில், அரவிந்தர் கண் மருத்துவமனைக்கு குபேந்திரனின் கண்கள் தானமாக வழங்கப்பட்டது.
இதற்கான அரவிந்தர் கண் மருத்துவமனை மற்றும் கோவில் நகரம் லயன் சங்கத்தினர், அவரது குடும்பத்தினருக்கு நன்றி தெரிவித்தனர்.