
வக்ப் சட்டத்தின் பெயரில், நாட்டு மக்களை எதிர்க்கட்சியினர் துாண்டி விடுகின்றனர். பார்லி.,யால் நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியால் ஒப்புதல் அளிக்கப்பட்ட சட்டத்துக்கு எதிராக அவர்கள் தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். இதில், எதிர்க்கட்சியினரின் பாசாங்குத்தனம் தெரிகிறது.
ஷெசாத் பூனாவாலா
தேசிய செய்தி தொடர்பாளர், பா.ஜ.,
மிகப்பெரிய சீர்திருத்தம்!
கொள்ளை அடிக்கும் கூட்டத்தின் மீது நடத்தப்பட்ட 'சர்ஜிக்கல் ஸ்டிரைக்' தான், வக்ப் திருத்த சட்டம். இந்த சட்டம் எந்த மதத்துக்கும் தீங்கானது அல்ல. இந்த சட்டம் மிகப்பெரிய சீர்திருத்தம். இதை ஏற்க முடியாத எதிர்க்கட்சியினர், மக்களை குழப்ப வதந்திகளை பரப்புகின்றனர்.
முக்தார் அப்பாஸ் நக்வி
முன்னாள் மத்திய அமைச்சர், பா.ஜ.,
சீரியசா இருங்க நிதிஷ்!
'பீஹாரில் இந்தாண்டு இறுதியில், பா.ஜ., தலைமையில் ஆட்சி அமையும்' என, ஹரியானா முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, முதல்வர் நிதிஷ் குமாரை ஓரங்கட்ட அக்கட்சி முயற்சிப்பது நிரூபணமாகி உள்ளது. இதை, நிதிஷ் சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
தேஜஸ்வி யாதவ்
பீஹார் எதிர்க்கட்சி தலைவர், ராஷ்ட்ரீய ஜனதா தளம்