தேர்தலில் செலவழிக்க என்னிடம் அவ்வளவு பணம் இல்லை: நிர்மலா சீத்தாராமன்
தேர்தலில் செலவழிக்க என்னிடம் அவ்வளவு பணம் இல்லை: நிர்மலா சீத்தாராமன்
ADDED : மார் 27, 2024 08:34 PM

புதுடில்லி: லோக்சபா தேர்தலில் போட்டியிடும் அளவுக்கு என்னிடம் செலவு செய்ய பணம் இல்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்தார்.
லோக்சபா தேர்தல் களம் விறுவிறுப்படைந்து வரும் நிலையில் ஆளும் பா.ஜ., இதுவரை 6 கட்டங்களாக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் 102 தொகுதிகளுக்கு ஏப். 19-ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடக்கிறது.
இந்த சூழ்நிலையில் செய்தி சேனல் ஒன்று ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பா.ஜ.வை சேர்ந்த மத்திய நிதி அமைச்சரும், கர்நாடகாவிலிருந்து ராஜ்சபா எம்.பி.,யாக தேர்வு பெற்றவருமான நிர்மலா சீத்தாராமன் கூறியது, வரும் லோக்சபா தேர்தலில் ஆந்திரா அல்லது தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுமாறு பா.ஜ., மேலிடம் வலியுறுத்தியது. தேசிய தலைவர் நட்டாவும் என்னிடம் கேட்டுக்கொண்டார்.
ஆனால் தேர்தலில் போட்டியிடும் அளவிற்கு செலவு செய்ய என்னிடம் அவ்வளவு பணம் இல்லை. எனினும் பா.ஜ. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வேன் என்றார்.

