ADDED : மார் 06, 2024 05:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துமகூரு : ''லோக்சபா தேர்தலில் எனக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் சோமண்ணாவுக்கு, 'சீட்' கொடுக்க வேண்டும்,” என, துமகூரு பா.ஜ., - எம்.பி., பசவராஜ் கூறி வருகிறார். ஆனால் இன்னொரு பா.ஜ., முன்னாள் அமைச்சர் மாதுசாமியும், துமகூரு 'சீட்' எதிர்பார்க்கிறார்.
சிக்கநாயக்கனஹள்ளியில் அவர் கூறியதாவது:
துமகூரு லோக்சபா தொகுதி, பா.ஜ., 'சீட்' கேட்டு, சோமண்ணா டில்லிக்கு சென்றாலும், எனக்கு கவலை இல்லை. நான் விநாயகர் போன்றவர். சோமண்ணா முருகனை போன்றவர். உலகை சுற்றி வந்து பழம் பெற முருகன் முயன்றார். ஆனால் விநாயகர், தாய், தந்தையை சுற்றி வந்து, பழத்தை பெற்றார்.
அதுபோல இங்கு இருந்தபடியே, 'சீட்' பெறுவேன். கடைசி நேரம் வரை, என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்பேன். முன்னாள் முதல்வர் எடியூரப்பாவை மட்டும் நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

