sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

போர் நிறுத்தம் தற்காலிகம் தான்; மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!

/

போர் நிறுத்தம் தற்காலிகம் தான்; மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!

போர் நிறுத்தம் தற்காலிகம் தான்; மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!

போர் நிறுத்தம் தற்காலிகம் தான்; மீண்டும் சீண்டினால் பாகிஸ்தான் இருக்காது; பிரதமர் மோடி கடும் எச்சரிக்கை!

39


UPDATED : மே 12, 2025 08:43 PM

ADDED : மே 12, 2025 08:13 PM

Google News

UPDATED : மே 12, 2025 08:43 PM ADDED : மே 12, 2025 08:13 PM

39


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ''மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் என்பதை பாகிஸ்தானுக்கு காட்டுவோம். பாகிஸ்தான் நிலைத்திருக்க வேண்டும் என்றால், பயங்கரவாத முகாம்களை அழிக்க வேண்டும். போர் நிறுத்தம் தற்காலிகம் தான்,'' என்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.



அதிரடி தாக்குதல்

காஷ்மீர் மாநிலம், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.இதையடுத்து, பாகிஸ்தானிய பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட எண்ணிய மத்திய அரசு, அந்நாட்டில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது.

முகாம்கள் அழிப்பு

'ஆபரேஷன் சிந்துார்' என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்ட இந்த தாக்குதலில், 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்திலும், ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் செயல்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.

ஏவுகணைகள்

இதை எதிர்த்து பாகிஸ்தான், இந்திய குடியிருப்பு பகுதிகள் மீதும், ராணுவ நிலைகள் மீதும் ட்ரோன்கள், ஏவுகணைகளை வீசி தாக்க முயற்சித்தது. அதை நமது ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது.

வேண்டுகோள்

இந்நிலையில், பாகிஸ்தான் ராணுவ முகாம்கள், விமானப்படை தளங்களை குறி வைத்தும் இந்தியா தாக்கியது. இதில் பலத்த சேதத்தை எதிர்கொண்ட பாகிஸ்தான், தன் நாட்டு ராணுவ டி.ஜி.எம்.ஓ., அதிகாரியை இந்தியாவுடன் பேச வைத்தது. போர் நிறுத்தம் செய்து கொள்ளலாம் என்று வேண்டுகோள் விடுத்தது. பயங்கரவாத முகாம்கள் அழிப்பு, பாகிஸ்தானுக்கு பாடம் கற்பித்தல் என்ற தன் இலக்குகள் நிறைவேறிய நிலையில், இந்தியா போர் நிறுத்தம் செய்ய ஒப்புக்கொண்டது.

பிரதமர் உரை

இந்நிலையில், ஆபரேஷன் சிந்துார் மற்றும் போர் நிறுத்தம் தொடர்பாக நாட்டு மக்கள் மத்தியில் விளக்கம் அளிக்கும் வகையில் பிரதமர் மோடி, இன்று தொலைக்காட்சியில் உரையாற்றினார்.

அவர் கூறியதாவது:

நன்றி

நாட்டின் பலம், ராணுவ வீரர்கள் பலம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. நாம் என்ன செய்வோம் என்று உலகமே கண்டுவிட்டது. நமது ராணுவ வீரர்களுக்கும், உளவுத்துறையினருக்கும், ஆயுதங்களை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் எனது வணக்கங்கள். ஆபரேஷன் சிந்துாருக்கு ஆதரவாக நின்ற மக்களுக்கு நன்றி.

பஹல்காமில், துளியும் கருணை இல்லாமல் குடும்பத்தினர், குழந்தைகள் கண் முன்னே குடும்ப தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், என்னை மனதளவில் மிகவும் வேதனைக்கு ஆளாக்கியது.

துல்லிய தாக்குதல்

இந்த தாக்குதலுக்கு பிறகு, ஒட்டுமொத்த நாட்டு மக்களும், பயங்கரவாதிகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நின்றனர். பயங்கரவாதிகளை தீர்த்துக் கட்டுவேன் என்று நான் உறுதி அளித்தேன். அதன்படி இந்தியா அதிரடி தாக்குதல் நடத்தியது. பெண்களின் குங்குமத்தை அழித்தால் என்ன நடக்கும் என்பதை இன்று பயங்கரவாதிகள் உணர்ந்துள்ளனர். அந்தளவுக்கு நாம் துல்லிய தாக்குதல் நடத்தி இருக்கிறோம்.

நீதி

இத்தகைய தாக்குதலை நாம் நடத்துவோம் என்று பயங்கரவாதிகள் நினைத்துக்கூட பார்த்திருக்க மாட்டார்கள். சிந்துார் நடவடிக்கை மூலம், பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டுள்ளது.பயங்கரவாத முகாம்கள் துடைத்து எறியப்படுவதை நமது ராணுவம் உறுதி செய்துள்ளது.

ஆதரவு

பயங்கரவாத முகாம்கள் பகாவல்பூர், முரித்கேவில் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பயங்கரவாத தாக்குதல் சம்பவங்களில் இந்த முகாம்களுக்கு முக்கிய தொடர்பு இருக்கிறது. நமது தாக்குதலால் அச்சம் அடைந்த பாகிஸ்தான், இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தியது. அந்த நாடு பயங்கரவாதிகளுக்கு ஆதரவு தெரிவித்து, நமது மக்கள் மீதும், பள்ளிகள், கோவில்கள் மீதும் தாக்குதல் நடத்தியது.

தப்பிக்க வழி

நாம் பாகிஸ்தான் மீது ஏவிய ஒவ்வொரு ஏவுகணையும், டிரோன்களும் இலக்கை வெற்றிகரமாக குறி வைத்தன. அவர்களது ட்ரோன்கள் எல்லாம் சுட்டு வீழ்த்தப்பட்டதை உலகம் கண்டது. மூன்று நாட்களிலேயே இந்த போரில் இருந்து தப்பிக்கும் வழியை பாகிஸ்தான் தேடியது. டி.ஜி.எம்.ஓ., மூலம் சண்டை நிறுத்தம் செய்ய வேண்டுகோள் விடுத்தது.

எதிர்கால செயல்பாடு

இதனால் பாகிஸ்தானுக்கு எதிரான சண்டை, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மீண்டும் சீண்டினால் இந்தியாவின் உண்மையான பலத்தை பாகிஸ்தான் பார்க்க வேண்டியிருக்கும். அவர்களது எதிர்கால செயல்பாடுகளை பொறுத்து, போரை நிறுத்தி வைத்திருப்பது ஆய்வு செய்யப்படும்.

தோற்கடித்தோம்

மீண்டும் ஒரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நாம் யார் என்பதை பாகிஸ்தானுக்கு காட்டுவோம். எந்த விதமான அணு ஆயுத அச்சுறுத்தலையும் இந்தியா பொறுத்துக் கொள்ளாது. அதை சகித்துக் கொள்ளாது.நமது ஒட்டு மொத்த படைகளும் உச்சபட்ச விழிப்பு நிலையில் உள்ளனபோர்க்களத்தில் ஒவ்வொரு முறையும் நாம் பாகிஸ்தானை தோற்கடித்து இருக்கிறோம்.

வலிமை

ஒட்டு மொத்த உலகமும் பாகிஸ்தானின் உண்மையான முகத்தை தற்போது பார்த்து விட்டது. இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட பாதுகாப்பு தளவாடங்களின் வலிமையான செயல்திறனை உலகம் பார்த்து விட்டது.

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ராணுவம் மரியாதை செய்திருக்கிறது. எதிர்காலத்தில் பாகிஸ்தான் நிலைத்திருக்க வேண்டும் என்றால் அவர்கள் தங்கள் பயங்கரவாத முகாம்களை முற்றிலும் அழிக்க வேண்டும். இல்லையெனில் பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் பலியாக நேரிடும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us