ADDED : மார் 14, 2024 04:13 AM
விஜயபுரா, : ''நான் ஒரு போராளி. நான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், போராடி வெற்றி பெறுவேன்,'' என மத்திய விவசாய துறை இணை அமைச்சர் ஷோபா தெரிவித்தார்.
விஜயபுராவில் நேற்று அவர் கூறியதாவது:
உடுப்பி - சிக்கமகளூரு தொகுதியில், இரண்டு முறை என்னை எம்.பி.,யாக வெற்றி பெற செய்துள்ளனர். இங்கு யார் போட்டியிட்டாலும், வெற்றி பெறுவது உறுதி.
தொகுதியில், பல்வேறு வளர்ச்சி பணிகள் செய்துள்ளேன். என்னை 'கோ பேக்' என்று கூறுவது, வெளியூரை சார்ந்தவர்கள். உள்ளூரில் யாரும் போராட்டம் நடத்தவில்லை.
கட்சியின் அடிமட்டத்தில் இருந்து வந்த என்னை, பிரதமர் மோடி அவரது அரசில் அமைச்சராக்கியுள்ளார். இதற்கு தொகுதி மக்கள் தான் முழு காரணம். என்னை பா.ஜ.,வின் சேவைக்காக அர்ப்பணித்து கொண்டுள்ளேன். நான் ஒரு போராளி. நான் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், போராடி வெற்றி பெறுவேன்
இவ்வாறு அவர் கூறினார்.

