என் வாழ்நாள் இறுதி வரை மக்களுக்கு சேவை சேய்வேன்: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்
என் வாழ்நாள் இறுதி வரை மக்களுக்கு சேவை சேய்வேன்: ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக்
ADDED : அக் 16, 2025 03:16 PM

புவனேஸ்வர்: என் வாழ்நாள் இறுதி வரை ஒடிசாவிற்கு சேவை செய்வேன் என்று மாநில முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.
ஒடிசா சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும் பிஜூ ஜனதா தள தலைவருமான நவீன் பட்நாயக் உடல்நிலை சரியில்லாமல் மும்பை மற்றும் புவனேஸ்வரில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த அவர், டில்லியில் கடந்த ஒரு மாதம் ஓய்வெடுத்தார். அதன்பிற்கு கடந்த வாரம் ஒடிசாவிற்கு திரும்பினார்.
நவீன் பட்நாயக், கடந்த 6 மாதங்களுக்கு பிறகு இன்று தனது 79 வது பிறந்தநாளில் கட்சியின் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் பாதயாத்திரையில் கலந்து கொண்டார்.
மருத்துவ ஓய்வுக்கு பிறகு அவர் கலந்து கொண்ட முதல் பொது நிகழ்ச்சி ஆகும்.
நவீன் பட்நாயக் பேசியதாவது:
கட்சியின் சார்பாக ஆண்டுதோறும் நடைபெறும் இந்த யாத்திரையில் பங்கேற்று இருந்த அனைவருக்கும் நன்றி.தனது வாழ்நாள் இறுதி வரை மாநிலத்திற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்வேன்.பிஜேடி உங்களுடையது, ஒடிசா மக்களின் கட்சி என்று கூறினார்.