ADDED : அக் 16, 2025 02:28 PM

புதுடில்லி: இந்த தீபாவளி பண்டிகையை கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.
கடந்த 2014ம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக மோடி பதவியேற்றது முதல் தற்போது வரை, ஒவ்வொரு தீபாவளி பண்டிகையையும், இந்திய பாதுகாப்பு படையினருடன் கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் வரும் 20ம் தேதி கொண்டாடப்படும் இந்தாண்டுக்கான தீபாவளியை பிரதமர் மோடி கோவாவில் உள்ள இந்திய கடற்படையினருடன் கொண்டாட முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2024ல் குஜராத்தின் சர் கிரீக்
2023ல் ஹிமாச்சலப் பிரதேசத்தின் லெப்சா
2022ல் கார்கில் போர் நினைவிடம்
2021ல் ஜம்மு காஷ்மீரின் நௌஷெரா
2020ல் ராஜஸ்தானின் லோங்கேவாலா
2019ல் ஜம்மு காஷ்மீரின் ரஜோரி
2018ல் உத்தரகண்டின் ஹர்சிலில் உள்ள இந்தோ திபெத் படையினருடன்
2017ல் ஜம்மு காஷ்மீரின் குரேஸ் பிரிவுடன்
2016ல் ஹிமாச்சலப் பிரதேசத்தின் சும்டோ (இந்திய-சீன எல்லை)
2015ல் பஞ்சாபின் அமிர்தசரசில் உள்ள தோக்ராய் போர் நினைவிடம்
2014ல் லடாக்கின் சியாச்சினில் கொண்டாடியுள்ளார்.