குடும்பத்துக்காக அல்ல எல்லாருக்காகவும் உழைக்கிறேன் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உருக்கம்
குடும்பத்துக்காக அல்ல எல்லாருக்காகவும் உழைக்கிறேன் பீஹார் முதல்வர் நிதிஷ் குமார் உருக்கம்
ADDED : நவ 02, 2025 12:01 AM

பாட்னா: ''பீஹார் மக்களுக்காக, 20 ஆண்டுகளாக நேர்மையாகவும், கடின உழைப்புடனும் பணியாற்றி வருகிறேன். என் குடும்பத்துக்காக அல்ல; அனைத்து தரப்பு மக்களின் நலனுக்காக உழைத்து வருகிறேன்,'' என, அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் உருக்கமாக தெரிவித்து உள்ளார்.
முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கும் பீஹாரில், மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.
தற்சார்பு வரும் 6ல், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் சூடுபிடித் து உள்ளது.
ஆளும் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், மஹாகட்பந்தன் கூட்டணியில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தே ஜஸ்வி யாதவ் அறிவிக்கப்பட்டு உள்ளார்.
முதற்கட்ட தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் வீடியோ ஒன்றை நேற்று வெளியிட்டார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
நான் ஆட்சிக்கு வருவதற்கு முன், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 15 ஆண்டு காலம் 'காட்டாட்சி' நடத்தியது.
அப்போது சட்டம் - ஒழுங்கு மிக மோசமாக இருந்தது. தே.ஜ., கூட்டணி அரசு அமைந்ததும், சட்டம் - ஒழுங்கை மேம்படுத்த முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
கல்வி, சுகாதாரம், சாலைகள், மின்சாரம், நீர் வழங்கல், விவசாயம், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றின் நிலையும் மேம்பட்டுள்ளது.
காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி, பெண்களுக்காக எதுவுமே செய்யவில்லை. நாங்கள் அவர்களுக்கு அதிகாரமளித்து, தற்சார்புடையவர்களாக ஆக்கியுள்ளோம்.
துவக்கத்தில் இருந்தே அனை த் து தரப்பு மக்களின் முன்னேற்றத்துக்காக தே.ஜ., கூட்டணி பணியாற்றி வருகிறது.
வாய்ப்பு கொடுங்கள் காங்., கூட்டணியை போல குறிப்பிட்ட குடும்பத்துக்காக பணியாற்றவில்லை. முன்பு, 'பீஹாரி' என அழைப்பது அவமா னமாகக் கருதப்பட்டது.
தற்போது அது, மரியா தைக்குரியதாக மாறிவிட்டது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பீஹாரின் வளர்ச்சிக்கு முழு ஆதரவை அளித்து வருகிறது. தே.ஜ., கூட்டணியால் மட்டுமே பீஹாருக்கு நல்லது செய்ய முடியும். எங்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். பீஹாரை சிறந்த மாநிலமாக உருவாக்குவோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

