சித்துவை அறைந்து இருப்பேன்: மடாதிபதி சர்ச்சை கருத்து
சித்துவை அறைந்து இருப்பேன்: மடாதிபதி சர்ச்சை கருத்து
ADDED : நவ 14, 2024 09:36 PM

விஜயபுரா; ''எனது தோள் மீது கையை வைத்து இருந்தால், முதல்வர் சித்தராமையாவை கன்னத்தில் அறைந்து இருப்பேன்,'' என்று, மடாதிபதி சங்கனபசவ சிவாச்சார்யா சர்ச்சை கருத்து தெரிவித்து உள்ளார்.
விஜயபுராவின் மணகுளியில் உள்ள ஹிரேமத் அபினவ மடத்தின் மடாதிபதி சங்கனபசவ சிவாச்சார்யா சுவாமி. இவர், கொல்ஹாராவின் ரோனிஹாலா கிராமத்தில் நடந்த கிட்டூர் ராணி சென்னம்மாவின் 246 வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பஞ்சமசாலி சமூகத்திற்கு, '2 ஏ' இடஒதுக்கீடு வழங்கும் விஷயத்தில், பஞ்சமசாலி சமூகத்தினர் பொறுமையை, முதல்வர் சித்தராமையா பரிசோதிக்கிறார்.
பெங்களூரில் நடந்த 2 ஏ இடஒதுக்கீடு தொடர்பான கூட்டத்தில், மடாதிபதி பசவ ஜெய மிருத்யுஞ்ஜெய சுவாமி தோளில், சித்தராமையா கை வைத்து பேசுகிறார்.
என் தோள் மீது கையை வைத்து இருந்தால், அவரது கன்னத்தில் நான் அறைந்து இருப்பேன். இந்த ஆட்சியில் இடஒதுக்கீடு கிடைப்பது கஷ்டம்.
இவ்வாறு அவர் பேசினார்.
மடாதிபதியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.