விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை
விமானப்படை ஹெலிகாப்டர் குஜராத்தில் அவசரமாக தரையிறக்கம்: அதிகாரிகள் விசாரணை
ADDED : ஏப் 21, 2025 04:21 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜாம்நகர்: குஜராத்தில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் அவசரம், அவசரமாக தரையிறங்கியது.
குஜராத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ரங்மதி அணை அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் பறந்து கொண்டு இருந்தது. அப்போது திடீரென அந்த ஹெலிகாப்டர் அங்குள்ள சாங்கா என்ற கிராமத்தில் தரையிறக்கப்பட்டது.
இதுகுறித்து நிருபர்களிடம் பேசிய போலீஸ் எஸ்.பி., பிரேம்சுக் தேலு, ஹெலிகாப்டரில் இருந்தவர்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. சில சிக்கல்கள் காரணமாக, ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. என்ன பிரச்னை என்பதை விசாரித்து வருகிறோம் என்றார்.
அதே நேரத்தில் இந்த சம்பவம் குறித்து இந்திய விமானப்படை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை.

