ADDED : பிப் 18, 2025 09:45 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலக்காடு; ஒருங்கிணைந்த சிவில் இன்ஜினியர்ஸ் கவுன்சிலின் (ஐ.சி.இ.சி.,) மாவட்ட பிரிவு, பாலக்காட்டில் துவங்கப்பட்டுஉள்ளது.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், முண்டூர் ஐ.ஆர்.டி.சி.,யில் நடந்த ஒருங்கிணைந்த, சிவில் இன்ஜினியர்ஸ் கவுன்சிலின் பாலக்காடு பிரிவு கூட்டத்தை, கவுன்சிலின் மாநிலத் தலைவர் ஷினோஜ் துவக்கி வைத்தார்.
மலபார் பிரிவு தலைவர் அஷ்ரப் அலி தலைமை வகித்தார்.
கூட்டத்தில், எம்.இ.எஸ்., பொறியியல் கல்லூரி இயக்குனர் மகாதேவன் பிள்ளை, 'கான்கிரீட்டில் உள்ள விரிசல்கள் மற்றும் தீர்வுகள்' என்ற தலைப்பை மையமாகக் கொண்டு விளக்கம் அளித்தார். மாநில கன்வினர் ரஹீஸ், கவுன்சிலின் மாணவர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் சாஜன் ஜோஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.