ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரருக்கு ரூ.6 கோடி பரிசு; சித்தராமையா அறிவிப்பு
ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்லும் கர்நாடக வீரருக்கு ரூ.6 கோடி பரிசு; சித்தராமையா அறிவிப்பு
ADDED : டிச 21, 2025 05:33 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு: ஒலிம்பிக் போட்டிகளில் தங்கம் வெல்லும் கர்நாடகா மாநில விளையாட்டு வீரர்களுக்கு ரூ.6 கோடி பரிசு, அரசு வேலை வழங்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது;
கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றால், நான் அவர்களுக்கு ரூ.6 கோடி தருவேன். கர்நாடகத்தைச் சேர்ந்த ஒருவர் வெள்ளி வென்றால், நான் அவர்களுக்கு ரூ.4 கோடியும், வெண்கலத்திற்கு ரூ.3 கோடியும் வழங்குவேன்.
கர்நாடகாவைச் சேர்ந்த எவரும் தங்கம் அல்லது வெள்ளி வெல்ல வேண்டும் என்பதே இந்த அறிவிப்பின் நோக்கம். அது சாத்தியமாக. பயிற்சியுடன் கூடிய இலக்கு இருக்க வேண்டும். விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலைகள் வழங்க முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு சித்தராமையா கூறி உள்ளார்.

