sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காஷ்மீரில் உணவுக்காக மக்கள் வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகள்; தேடுதல் வேட்டை தீவிரம்

/

காஷ்மீரில் உணவுக்காக மக்கள் வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகள்; தேடுதல் வேட்டை தீவிரம்

காஷ்மீரில் உணவுக்காக மக்கள் வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகள்; தேடுதல் வேட்டை தீவிரம்

காஷ்மீரில் உணவுக்காக மக்கள் வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகள்; தேடுதல் வேட்டை தீவிரம்


UPDATED : டிச 21, 2025 05:22 PM

ADDED : டிச 21, 2025 05:19 PM

Google News

UPDATED : டிச 21, 2025 05:22 PM ADDED : டிச 21, 2025 05:19 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நமது நிருபர்

காஷ்மீரில் உணவுக்காக மக்கள் வீட்டிற்குள் புகுந்த பயங்கரவாதிகளை தேடும் வேட்டையில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரின் மஜல்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளதாக உளவுத்துறையினர் அளித்த தகவலின்படி ராணுவம் மற்றும் சிஆர்பிஎப் அடங்கிய பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உடனடியாக பாதுகாப்புப் படையினரும் பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கு இடையே கடுமையான மோதல் நடந்தது. தொடர்ந்து பயங்கரவாதிகள் மூன்று பேர் பதுங்கி இருப்பதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்திருந்தனர்.

கடந்த ஒரு வாரமாக, மஜல்டா பகுதியில் உள்ள வனப்பகுதியில், தேடுதல் வேட்டை தொடர்ந்து நீடித்தது. தற்போது மஜல்டா பகுதியின் சோன் கிராமத்தில் உள்ள ஒரு பொதுமக்கள் வீட்டிற்குள் மூன்று பயங்கரவாதிகள் நுழைந்து குடும்பத்திடம் உணவு கோரினர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, கிராமவாசிகள் உடனடியாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் அளித்தனர். இதனால் பாதுகாப்பு படையினர் உடனடியாக அந்தப் பகுதியை சுற்றி வளைத்தனர்.

தற்போது, பயங்கரவாதிகளைத் தேடும் நடவடிக்கையை பாதுகாப்புப் படைகள் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுவரை பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டு, பல்வேறு பக்கங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் சோதனை நடவடிக்கை தொடங்கப்பட்டு தீவிரமாக நடந்து வருகிறது. உணவு கோரி மக்கள் வீட்டிற்குள் பயங்கரவாதிகள் ஊடுருவிய சம்பவம் பரபரப்பை கிளப்பியுள்ளது.






      Dinamalar
      Follow us