மோடி மீண்டும் வராவிட்டால் ஆபத்து பா.ஜ. மூத்த தலைவர் ராமதாஸ் கருத்து
மோடி மீண்டும் வராவிட்டால் ஆபத்து பா.ஜ. மூத்த தலைவர் ராமதாஸ் கருத்து
ADDED : ஜன 23, 2024 05:36 AM

ஷமைசூரு: ''பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், சீனா, பாகிஸ்தான் நாடுகள், இந்திய எல்லையில் ஊடுருவும், என பா.ஜ., தலைவர் ராமதாஸ் தெரிவித்தார்.
மைசூரில் நேற்று அவர் கூறியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில், பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் பதவிக்கு வந்தால் மட்டுமே, இந்தியா உலக குருவாக முடியும். தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வராவிட்டால், பாகிஸ்தானும், சீனாவும் நம் நாட்டுக்குள் ஊடுருவும்.
பிரதமர் மோடியின் கனவு திட்டமான பி.எம்., ஸ்வநிதி மற்றும் பி.எம்., விஷ்வ கர்மா திட்டங்களுக்கு, மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கர்நாடகாவில் 21 லட்சம் பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.
நான் லோக்சபா தேர்தலில், சீட் எதிர்பார்க்கவில்லை. நான் போட்டியிட வேண்டும் என, ஆதரவாளர்கள் விரும்புவது உண்மைதான். ஆனால் நான் சீட் கேட்கவில்லை. மைசூரு, குடகு, ஹாசன், சாம்ராஜ்நகர், மாண்டியா தொகுதிகளில் தொண்டர்களை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதன் பொறுப்பை என்னிடம் அளித்துள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க, தொண்டர்கள், தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

