'மக்கள்தொகை குறைந்தால் சமூகம் அழியும்': மோகன் பகவத்
'மக்கள்தொகை குறைந்தால் சமூகம் அழியும்': மோகன் பகவத்
ADDED : டிச 02, 2024 02:24 AM

நாக்பூர்: “மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் குறைந்தால், சமூகம் அழிந்துவிடும்,” என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்., சார்பில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் அதன் தலைவர் மோகன் பகவத் பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
ஒரு சமூகம் வாழ மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் முக்கியமானது. சமீபகாலமாக அதன் விகிதம் குறைந்து வருவது கவலையளிக்கிறது.
மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் 2.1க்கு கீழ் சென்றால், அந்த சமூகம் அழிந்து விடும். அதை வேறு யாரும் அழிக்க வேண்டாம். அது தானாகவே அழிந்து விடும் என லோக்சங்ய சாஸ்திரம் கூறுகிறது.
கடந்த 1998 அல்லது 2002ல் வகுக்கப்பட்ட மக்கள்தொகை கொள்கை, அதன் வளர்ச்சி விகிதம் 2.1க்கு கீழ் சரியக் கூடாது என கூறுகிறது.
எனவே, மக்கள்தொகை வளர்ச்சி விகிதம் மூன்றுக்கு மேல் அதிகரிக்க வேண்டும். அது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.