உ.பி.யில் சட்டவிரோத மதமாற்ற மோசடி முறியடிப்பு; 6 மாநிலங்களைச் சேர்ந்த 10 பேர் கைது
உ.பி.யில் சட்டவிரோத மதமாற்ற மோசடி முறியடிப்பு; 6 மாநிலங்களைச் சேர்ந்த 10 பேர் கைது
ADDED : ஜூலை 19, 2025 07:23 PM

லக்னோ: உத்தரபிரதேச போலீசார் ஒரு பெரிய அளவிலான சட்டவிரோத மத மாற்ற மோசடியை முறியடித்து ஆறு மாநிலங்களைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
உத்தரபிரதேசத்தின் மாதம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் சங்கூர் பாபா என்ற ஜலாலுதீன், என்பவர் மதமாற்றம் உள்ளிட்ட நாச வேலைகளில் ஈடுபட்டு வந்ததாக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். சங்கூர் பாபாவுக்கு சொந்தமான, ரூ.40 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது.
இந்நிலையில், ஆக்ராவில் சட்டவிரோத மத மாற்றங்களில் ஈடுபட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால், ஆக்ரா போலீசார் ஒரு பெரிய நடவடிக்கையாக, மதமாற்ற மோசடியை முறியடித்துள்ளனர் என்று லக்னோவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது டிஜிபி ராஜீவ் கிருஷ்ணா தெரிவித்தார்.
ராஜஸ்தானில் இருந்து மூவரும், உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா இரண்டு பேரும், கோவா, உத்தரகண்ட் மற்றும் டில்லியில் இருந்து தலா ஒருவரும் என மொத்தம் 10 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு, பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவருடனான தொடர்புகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும் விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சர்வதேச தொடர்புகள் இருப்பதும், கனடா, துபாய் மற்றும் லண்டன் ஆகிய நாடுகளுடன் தொடர்புகள் இருப்பதும் தெரியவந்துள்ளது.மேற்கு வங்கம், கோவா, ராஜஸ்தான், டில்லி மற்றும் உத்தரகண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் போலீசார் நடத்திய சோதனையின் போது மதமாற்ற கும்பல் சிக்கி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.