ADDED : நவ 01, 2024 11:00 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெங்களூரு;
போலீஸ் துறை வெளியிட்டது அறிக்கை:
பட்டாசு விற்பனைக்கு 315 பேருக்கு தற்காலிகமாக லைசென்ஸ் வழங்கப்பட்டது. ஆனால் பலர் முறைப்படி அனுமதி பெறாமல், சாலை ஓரங்கள், தள்ளுவண்டிகளில் பட்டாசு விற்பது தெரிய வந்தது.
இதுதொடர்பாக போலீசார், சோதனை நடத்தினர். சட்டவிரோதமாக பட்டாசு விற்றது தொடர்பாக, அக்டோபர் 31 முதல், நவம்பர் 1 வரை 56 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சட்டவிரோதமாக பட்டாசு விற்றவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

