ADDED : பிப் 19, 2024 07:01 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஷிவமொகா: ''காங்கிரஸ் கட்சிக்காக கழுதை போன்று உழைக்கிறேன். கட்சி அனுமதித்தால், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்,'' என தொடக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகா மாவட்டம், ஷிகாரிபுராவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரஸ் கட்சிக்காக கழுதை போன்று உழைக்கிறேன். கட்சி அனுமதித்தால், லோக்சபா தேர்தலில் போட்டியிடுவேன்.
நாங்கள் தைரியமாக மக்களிடம் வந்து ஆசிர்வாதம் கேட்கிறோம்.
மாவட்டத்துக்கு அதிக மானியம் கொண்டு வருவேன். இது கட்சி திட்டமல்ல. இங்கு நடத்தப்படும் மாநாடு பதவிக்காகவும், தேர்தலுக்காகவும் இல்லை.
கட்சி, ஜாதி, மதம் பார்த்து திட்டமிடாதீர்கள். வாக்குறுதி அளித்தபடி செயல்பட்ட அரசுக்கு மக்கள் ஆதரவு தருவர். ராமரை வீதிக்கு கொண்டு வந்து பா.ஜ.,வினர் ஓட்டு கேட்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

