பருப்புக்கான இறக்குமதி வரிச்சலுகை நீட்டிக்கப்படாது: மத்திய அரசு
பருப்புக்கான இறக்குமதி வரிச்சலுகை நீட்டிக்கப்படாது: மத்திய அரசு
ADDED : பிப் 14, 2025 09:49 AM

புதுடில்லி: பருப்புக்கான இறக்குமதி வரிச்சலுகை நீட்டிக்கப்படாது என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
விலை உயர்வை தடுக்கவும், தேவையை நிறைவு செய்யவும் துவரை உள்ளிட்ட சில பருப்பு வகைகளின் இறக்குமதி வரியை மத்திய அரசு கடந்த 2023ம் ஆண்டு ரத்து செய்தது. தொடர்ந்து 3 முறை இந்த வரிச்சலுகை நீட்டிப்பு செய்யப்பட்டது.
இந்த மாதம் 28ம் தேதியுடன் பருப்பு வகைகளின் இறக்குமதி வரிச் சலுகை நிறைவடைகிறது.இந்நிலையில், பருப்பு வகைகளுக்கு இறக்குமதி வரி கிடையாது எனும் சலுகை இனி நீட்டிக்கப்படாது என்று மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
நேற்று டில்லியில் நடந்த தேசிய பருப்பு வகைகள் மாநாட்டில் அவர் கூறியதாவது: இந்தியாவில் தற்போது துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு விளைச்சல் குறித்து ஆய்வு செய்யப்படும். அதன் பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் அமைச்சர்கள் கூட்டத்தில் இது தொடர்பாக இறுதி முடிவு எடுக்கப்படும். 2027ம் ஆண்டுக்குள் பருப்பு உற்பத்தியில் தன்னிறைவு அடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, இவ்வாறு அவர் கூறினார்.