காங்., செய்யாததை 10 ஆண்டில் செய்து காட்டியது பா.ஜ.,: அனுராக் தாக்கூர்
காங்., செய்யாததை 10 ஆண்டில் செய்து காட்டியது பா.ஜ.,: அனுராக் தாக்கூர்
UPDATED : ஜன 08, 2024 04:14 PM
ADDED : ஜன 08, 2024 03:55 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹமிர்பூர்: 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாத பணியை மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்ததாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு பிரசாரமாக 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா'வை பிரதமர் மோடி கடந்த நவம்பர் மாதம் துவங்கி வைத்தார். 50 நாட்களுக்கு மேலாக இந்த பிரசார யாத்திரை தொடர்ந்து வருகிறது.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் கூறுகையில், ''பிரதமர் மோடியின் ஆட்சியில் ஏழை, எளிய மக்களின் நலனுக்காக பல திட்டங்கள் துவங்கப்பட்டன. 70 ஆண்டுகளில் காங்கிரஸ் செய்ய முடியாத பணியை மோடி அரசு 10 ஆண்டுகளில் செய்தது. இதற்காகவே 'விக்சித் பாரத் சங்கல்ப் யாத்ரா' துவங்கப்பட்டது''என்றார்.