மணிப்பூரில் இளம் பெண்கள் நிர்வாணம்: போலீஸ் வேடிக்கை; குற்றப்பத்திரிகையில் ‛திடுக்‛
மணிப்பூரில் இளம் பெண்கள் நிர்வாணம்: போலீஸ் வேடிக்கை; குற்றப்பத்திரிகையில் ‛திடுக்‛
UPDATED : மே 01, 2024 09:54 AM
ADDED : மே 01, 2024 02:03 AM

இம்பால்: மணிப்பூரில் கூக்கி பழங்குடியின பெண்கள் இருவரை நிர்வணமாக இழுத்து சென்ற சம்பம் தொடர்பாக சி.பி.ஐ, தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மணிப்பூரில் கடந்தாண்டு மே 4ம் தேதி காங்போப்கி மாவட்டத்தைச் சேர்ந்த இரு பழங்குடியின இளம் பெண்களை , இளைஞர்கள் நிர்வணமாக அழைத்து செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி நாட்டையே உலுக்கி எடுத்தது.
மணிப்பூர் அரசு மற்றும் மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் சி.பி.ஐ.,வழக்கு பதிந்து விசாரணை நடத்தி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சம்பவத்தின் போது சிக்கிய இரு கூக்கி இனப் பழங்குடி பெண்களை வன்முறை கும்பல் தாக்கி பலாத்காரம் செய்தது. பின் அவர்களை நிர்வாணப்படுத்தியது. அப்போது சாலையோரம் போலீஸ் வாகனத்துடன் அங்கு 7 போலீசார் இருந்துள்ளனர். நிர்வாணமாக இழுத்துச் செல்லப்படும் முன் இருபெண்களும் தங்களை காப்பாற்று மாறு போலீசாரிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் போலீஸாரோ வாகனத்தை எடுக்க சாவி இல்லை என்று கூறி, வன்முறை கும்பலிடமே இரு பெண்களை விட்டுச் சென்றனர்.
இதையடுத்து இரு பெண்களையும் வன்முறை கும்பல் நிர்வாணமாக இழுத்துச் சென்றனர். இதனை போலீசாரே கைகட்டி , வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர். இவ்வாறு குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.