ADDED : மார் 19, 2024 06:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
யாத்கிர்: யாத்கிரின், சுர்பூர் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வாக இருந்தவர் ராஜா வெங்கடப்பா நாயக். சமீபத்தில் மாரடைப்பால் இவர் காலமானார். இவரால் காலியான தொகுதிக்கு, மே 7ல் தேர்தல் நடக்கவுள்ளது.
இடைத்தேர்தலில், பா.ஜ., சார்பில் முன்னாள் அமைச்சர் ராஜுகவுடா போட்டியிடும் வாய்ப்பு உள்ளது. காங்கிரஸ் யாரை களமிறக்குகிறது என்பது தெரியவில்லை. ராஜா வெங்கடப்பா மகன் ராஜா வேணுகோபால நாயக்குக்கு சீட் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அவருக்கு கிடைக்காவிட்டால், அவரது தாய்க்கு சீட் கொடுக்கும்படி, தொண்டர்கள் வலியுறுத்துகின்றனர்.
சுர்பூர் தொகுதியில், குருபர், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினர், சிறுபான்மையினர் ஓட்டுகள், வேட்பாளர்களின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கின்றன.

