ADDED : மார் 18, 2024 05:38 AM

தங்கவயல் : வாஜ்பாய் உள் விளையாட்டு அரங்கம் திறப்பு விழா, தங்கவயலில் நடந்தது.
தங்கவயல் காஸ்மோபாலிடன் கிளப் இயங்கி வரும் கிங் ஜார்ஜ் அரங்கில், புதிதாக அடல் பிகாரி வாஜ்பாய் பெயரில் உள் விளையாட்டு அரங்கம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று முன்தினம் நடந்தது.
கோலார் மாவட்ட பா.ஜ., துணைத் தலைவர் கமல்நாதன் கூறியதாவது:
விளையாட்டு துறையில் தங்கவயல் எப்போதுமே சிறந்து விளங்கிய வரலாறு உண்டு. விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் கோலார் பா.ஜ., - எம்.பி., முனிசாமி நிதியில், 53 லட்சம் ரூபாய் வழங்கினார்.
இதில் மூன்று 'ஷட்டில் காக்' திடல் சர்வதேச தரத்தில் அமைக்கப்படும். சிந்தடிக் தரை ஏற்படுத்தப்படுகிறது.
இளைஞர்கள் மட்டுமின்றி, சிறுவர்களுக்கும் பயிற்சி அளிக்கப்படும். காஸ்மோபாலிட்டன் கிளப் உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு முன்னுரிமை வழங்கப்படும். முனிசாமி எம்.பி.,க்கு தங்கவயல் மக்கள் சார்பில் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார். சுரேஷ் நாராயணா குட்டி, எம்.விஜயகுமார், கவுன்சிலர் பிரவீன் குமார், பாண்டியன், கண்ட்லப்பா, நடராஜன், நைனா ரவி உட்பட பலர் பங்கேற்றனர்.

