தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/ஆஷா பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை ரூ,3,000லிருந்து ரூ,6,000 ஆக உயர்வு

ஆஷா பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை ரூ,3,000லிருந்து ரூ,6,000 ஆக உயர்வு

ஆஷா பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை ரூ,3,000லிருந்து ரூ,6,000 ஆக உயர்வு


UPDATED : அக் 06, 2026 10:10 PM

ADDED : அக் 06, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 10:10 PM ADDED : அக் 06, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: “ஆஷா பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை, 3,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருப்பது, வீடுவீடாக சென்று வழங்கப்படும் சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்தும்,” என, டில்லி முதல்வர் ரேகா குப்தா பேசினார்.

‘சேவா சங்கல்ப் அபியான்’ திட்டத்தின் கீழ், ‘ஆஷா’ எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட ஊக்கத்தொகை வழங்குதல் உட்பட, பல்வேறு திட்டங்களை துணைநிலை கவர்னர் தரஞ்ஜித் சிங் சாந்து, முதல்வர் ரேகா குப்தா ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.

டில்லி தியாகராஜ் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ரேகா குப்தா பேசுகையில், “சேவா சங்கல்ப் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக ஆஷா எனப்படும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்கத் தொகை, 3,000 ரூபாயில் இருந்து, 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஊதிய உயர்வால் டில்லியில் உள்ள, 6,690 ஆஷா பணியாளர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இது, வீடுவீடாக சென்று வழங்கப்படும் சுகாதார சேவையை மேலும் வலுப்படுத்தும்,” என்றார்.

காப்பக நிர்வாகத்துக்கான இணையதளம், ஜி.பி. பந்த் மருத்துவமனையில், ‘சோட்டோ’ எனப்படும் உறுப்பு தானம் மற்றும் மாற்று அறுவை சிகிச்சை தொடர்பான முழு செயல்முறையையும் ஒருங்கிணைக்கும் தலைமை அலுவலகம், விரிவாக்கப்பட்ட, ‘அன்மோல்’ எனப்படும் மேம்பட்ட பச்சிளம் குழந்தை கண்காணிப்பு மற்றும் உகந்த உயிர் காக்கும் பராமரிப்பு திட்ட ரத்த பரிசோதனைக் கூடம் ஆகியவையும், இந்நிகழ்ச்சியில் தொடங்கி வைக்கப்பட்டன.

சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் பங்கஜ் குமார் சிங் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us