sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வருமானம் அதிகரிப்பு

/

அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வருமானம் அதிகரிப்பு

அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வருமானம் அதிகரிப்பு

அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் வருமானம் அதிகரிப்பு

2


ADDED : ஜூலை 18, 2025 11:46 PM

Google News

2

ADDED : ஜூலை 18, 2025 11:46 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: நாட்டில், பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் வருமானம், 2022- - 23ம் நிதியாண்டில், 223 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஏ.டி.ஆர்., எனப்படும் ஜனநாயக சீர்திருத்த சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, அரசு சாரா அமைப்பான ஏ.டி.ஆர்., நேற்று வெளியிட்ட அறிக்கை:


நாட்டில், 22 மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத, 739 அரசியல் கட்சிகளின், 2022 - 23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில், 501 கட்சிகளுக்கு மட்டுமே தணிக்கை மற்றும் பங்களிப்பு அறிக்கைகள் உள்ளன. இந்த கட்சிகளின் வருமானம், 223 சதவீதம் அதிகரித்துள்ளது. முதல் 10 இடங்களில், குஜராத்தைச் சேர்ந்த ஐந்து கட்சிகள் உள்ளன.

முதல் 10 இடங்களில் உள்ள அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் மொத்த வருமானம் 1,582 கோடி ரூபாயாக உள்ளது. இதில், பாரதிய தேசிய ஜனதா தளம் கட்சி, 576 கோடி ரூபாய் வருமானத்துடன் முதலிடத்தில் உள்ளது. 416 கோடி ரூபாய் வருமானத்துடன், சத்யவாடி ரக் ஷக் கட்சி இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூ இந்தியா யுனைடெட் கட்சியின் வருமானம், 404 கோடி ரூபாயாக உள்ளது.

இந்த வருமானம் அனைத்தும், நன்கொடையாக பெறப்பட்டதாக அக்கட்சி தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தில் அதிகபட்சமாக அங்கீகரிக்கப்படாத கட்சிகள் உள்ளன. அதைத் தொடர்ந்து, டில்லி, பீஹாரில் உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us