sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சென்னையில் அதிகரித்த கடல்நீர்மட்டம்: பார்லி.,யில் மத்திய அரசு தகவல்

/

சென்னையில் அதிகரித்த கடல்நீர்மட்டம்: பார்லி.,யில் மத்திய அரசு தகவல்

சென்னையில் அதிகரித்த கடல்நீர்மட்டம்: பார்லி.,யில் மத்திய அரசு தகவல்

சென்னையில் அதிகரித்த கடல்நீர்மட்டம்: பார்லி.,யில் மத்திய அரசு தகவல்

5


UPDATED : டிச 18, 2024 10:27 PM

ADDED : டிச 18, 2024 09:14 PM

Google News

UPDATED : டிச 18, 2024 10:27 PM ADDED : டிச 18, 2024 09:14 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த 1993 - 2020ம் ஆண்டு காலகட்டத்தில் சென்னையில் கடல் நீர்மட்டம் ஆண்டுக்கு 4.31 மி.மீ., உயர்ந்துள்ளது,'' என மத்திய அரசு கூறியுள்ளது.

இது தொடர்பாக பார்லிமென்டில் மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: பல்வேறு காரணங்களினாலும், பருவநிலை மாற்றம் காரணமாக ஆண்டுக்கு ஆண்டு கடல் நீர்மட்டம் அதிகரித்து வருகிறது. இது மெதுவாக உயர்ந்து வருவதால், அது குறித்து ஆய்வு செய்ய 30 ஆண்டுகள் தேவை. ஆனால் கடல் நீர்மட்டம் உயர்வு தொடர்பாக ஆய்வு செய்ய 5 ஆண்டுகள் என்பது போதுமான காலம் அல்ல. இருப்பினும் பல்வேறு அறிவியல் ஆய்வுகளின்படி, 1900 -2000 காலகட்டத்தில், கடல் நீர்மட்டம் ஆண்டுதோறும் 1.7 மி.மீ., உயரம் அதிகரித்து உள்ளது.

1993 - 2015 ல் இந்திய பெருங்கடலின் வட பகுதியில் ஆண்டுக்கு 3.3 மி.மீ., உயரம் அதிகரித்து காணப்படுகிறது. சமீபத்திய ஆய்வுகளும், இந்திய கடல் பகுதிகளில் கடல் நீர்மட்டம் உயர்ந்து வருவது தெரியவந்துள்ளது.செயற்கைக்கோள் மூலம் நடத்தப்பட்ட ஆய்வுகளில், 1993- 2020 காலகட்டத்தில்

சென்னை- 4.31 மி.மீ.,

மும்பை- 4.59 மி.மீ.

மர்மகோவா -4.10 மி.மீ.,

கொச்சி -4.10 மி.மீ.,

விசாகப்பட்டினம்- 4.27 மி.மீ.,

பிரதீப் -4.43 மி.மீ., ஆண்டுதோறும் அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் ஜிதேந்தர் சிங் கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us