ADDED : ஜன 21, 2025 07:19 PM

ஸ்ரீனிவாஸ்புரி:ஸ்ரீனிவாஸ் பூரி பகுதியில் இருந்து டில்லி மாநகராட்சிக்கு சுயேச்சையாக போட்டியிட்டவர், முதல்வர் ஆதிஷி முன்னிலையில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன்னதாக ஆம் ஆத்மி, தன் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், பிற கட்சியினரை கட்சியில் சேர்ப்பது தீவிரமடைந்துள்ளது. பிற கட்சிகளின் அடிமட்டத் தலைவர்களை ஈர்ப்பதிலும், முக்கியமான குடிமைப் பிரச்னைகளைத் தீர்ப்பதிலும் ஆம் ஆத்மி கட்சி கவனம் செலுத்தி வருகிறது.
இதன் ஒருபகுதியாக, சமூக சேவகரான மகாவீர் பைசோயா, தன் ஆதரவாளர்கள் 16 பேருடன் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார். அவர்களை முதல்வர் ஆதிஷி, ராஜ்யசபா எம்.பி., சஞ்சய் சிங் ஆகியோர் வரவேற்றனர். அவர்களுக்கு ஆம் ஆத்மி தொப்பிகள், கொடி வழங்கி முறையாக இணைத்துக் கொண்டனர்.
மகாவீர் பைசோயா, ஆம் ஆத்மியில் இணைந்தது வரவிருக்கும் தேர்தல்களில் கட்சியின் வெற்றியை வலுப்படுத்தும் என, முதல்வர் ஆதிஷி நம்பிக்கை தெரிவித்தார்.