ADDED : அக் 04, 2011 08:16 PM
புதுடில்லி : சர்வதேச அளவிலான பயங்கரவாதத்தை, இந்தியா- ஆப்கானிஸ்தான் நாடுகள் இணைந்து வேரறுக்க உள்ளதாக இருநாட்டு தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்திய- ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கிடையேயான உறவு, வர்த்தகம் உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்களில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். பின், கூட்டுஅறிக்கை வெளியிடப்பட்டது. பின் இருவரும் கூட்டாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்தனர். இந்திய பிரதமர் மன்மோகன் சிங் கூறியதாவது, சர்வதேச அளவில், பயங்கரவாதத்தை ஒழிப்பதில், ஆப்கானிஸ்தானுடன் இந்தியா இணைந்து செயல்பட உள்ளது. இந்தியா ஒருபோதும் அண்டைநாடுகளுக்கு எதிராக செயல்பட்டதுமில்லை, செயல்படப் போவதும் இல்லை. பயங்கரவாத தாக்குதலில், ஆப்கன் முன்னாள் அதிபர் ரப்பானி பலியானதற்கு இந்தியா சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். ஆப்கானிஸ்தான் வளர்ச்சிக்கு, இந்தியா துணைநிற்கும் என்றும் அவர் கூறினார்.

