‛‛இண்டியா கூட்டணி'' துணையாக இருக்கு : கெஜ்ரிவாலுக்கு ராகுல் ஆறுதல்
‛‛இண்டியா கூட்டணி'' துணையாக இருக்கு : கெஜ்ரிவாலுக்கு ராகுல் ஆறுதல்
ADDED : ஆக 17, 2024 01:22 AM

புதுடில்லி: அநீதிக்கு எதிராக போராடும் உங்களுக்கு ‛‛இண்டியா கூட்டணி' துணையாக இருக்கும் என திகார் சிறையில் உள்ள டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு காங். எம்.பி., ராகுல் ஆறுதல் கூறியுள்ளார்.
டில்லி ஆம் ஆத்மி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த மார்ச் மாதமும், சி.பி.ஐ.யால் கடந்த ஜூன் மாதமும் கைது செய்யப்பட்ட டில்லி ஆம் ஆத்மி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நேற்று அவருக்கு 56 வது பிறந்த நாள் இதையொட்டி பார்லிமென்ட் லோக்சபா எதிர்கட்சி தலைவரும், காங்.. எம்.பி.யுமான ராகுல் தனது ‛எக்ஸ்' தளத்தில் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்து, அநீதியை எதிர்த்து போராடும் உங்களுக்கு இண்டியா கூட்டணி எப்போதும் துணையாக இருக்கும் என்றார்.

