sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

இந்திய - சீன எல்லை பிரச்னை தீரவில்லை; வெளியுறவு கொள்கை நிபுணர் எச்சரிக்கை

/

இந்திய - சீன எல்லை பிரச்னை தீரவில்லை; வெளியுறவு கொள்கை நிபுணர் எச்சரிக்கை

இந்திய - சீன எல்லை பிரச்னை தீரவில்லை; வெளியுறவு கொள்கை நிபுணர் எச்சரிக்கை

இந்திய - சீன எல்லை பிரச்னை தீரவில்லை; வெளியுறவு கொள்கை நிபுணர் எச்சரிக்கை

1


ADDED : ஜன 30, 2025 01:25 AM

Google News

ADDED : ஜன 30, 2025 01:25 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை : 'நம் எல்லையில் உள்ள படைகளை சீனா விலக்கிக் கொண்டாலும், அந்நாட்டால், நமக்கு மிகப்பெரிய பிரச்னை காத்திருக்கிறது' என, வெளியுறவு கொள்கை நிபுணர் ராஜா மோகன் எச்சரித்துள்ளார்.

நம் நாட்டுக்கும், அண்டை நாடான சீனாவுக்கும் இடையே எல்லையை பகிர்ந்து கொள்வது தொடர்பான மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த 2020, ஜூன் 15ல் லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு வழியாக ஊடுருவ முயன்ற சீன வீரர்களை, நம் நாட்டு வீரர்கள் விரட்டியடித்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த மோதலில், நம் வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். சீனா தரப்பில் 40 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்டது. இந்த சம்பவத்துக்குப் பிறகு, இந்தியா - சீனா இடையிலான உறவு மேலும் சிக்கலானது.

இந்த சூழலில், கடந்தாண்டு அக்டோபரில், எல்லையில் வீரர்களை திரும்பப் பெறுவது தொடர்பான ஒப்பந்தத்தில் இரு நாடுகளும் கையெழுத்திட்டன.

நேரடி விமான சேவை


இதையடுத்து, இரு தரப்பிலும் உறவை மேம்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை இந்தியா - சீனா எடுத்து வருகின்றன. சமீபத்தில் சீனா சென்ற நம் வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி, அந்நாட்டு வெளியுறவு இணை அமைச்சர் சுன் வெய்டோங்கை சந்தித்து பேசினார்.

அப்போது, இந்தியா - சீனா இடையே நேரடி விமான சேவை, கைலாஷ்- -- மானசரோவர் புனித யாத்திரை மேற்கொள்ளுதல், எல்லையில் உள்ள நதிகளின் தரவுகளை பகிர்வது உள்ளிட்ட விவகாரங்களுக்கு இரு நாடுகளும் ஒப்புதல் அளித்தன.

இந்நிலையில், சீனாவால் மிகப்பெரிய பிரச்னை ஏற்பட உள்ளதாக நம் நாட்டில் உள்ள பேராசிரியரும், வெளியுறவு கொள்கை நிபுணருமான ராஜா மோகன் எச்சரித்துள்ளார்.

மஹாராஷ்டிராவின் மும்பையில், இந்திய ஆசிய சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்று, அவர் கூறியதாவது:

கிழக்கு லடாக் எல்லையில் இருநாட்டு படைகளும் விலக்கிக் கொள்ளப்பட்டது அமைதிக்கான சிறிய ஆரம்பத்தை தந்தாலும், சீனாவுடன் இன்னும் பல பெரிய பிரச்னைகள் உள்ளன.

மிகப்பெரிய பிரச்னை


இரு நாடுகளுக்கு இடையே விமான சேவை துவங்கப்பட்டாலும், மானசரோவர் யாத்திரையை தொடர முடிவு செய்திருந்தாலும், அந்நாட்டுடன் மிகப்பெரிய பிரச்னை நமக்கு காத்திருக்கிறது.

எல்லையில், இன்னும் 50,000 வீரர்கள் ஒருவரையொருவர் எதிர்கொண்டு வருகின்றனர். அந்நாட்டுடன் கோடிக்கணக்கான ரூபாய் வர்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது.

பிரம்மபுத்திரா நதியின் மேலே பிரமாண்டமான அணையை அந்நாடு கட்டி வருவதும் நமக்கான ஆபத்துதான். அமெரிக்காவில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. நாட்டின் தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்காக அந்நாட்டுடனான தன் உறவுகளை மேலும் வலுப்படுத்த இந்தியா பாடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நம் நாட்டு எல்லையையொட்டி, தன் ஆக்கிரமிப்பில் உள்ள திபெத்தில் பாய்ந்தோடும் பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே, 11.17 லட்சம் கோடி ரூபாய் செலவில், உலகின் மிகப்பெரிய அணையை கட்ட சீனா முடிவு செய்துள்ளது.

இது சீனாவின் மறைமுகப் போருக்கான ராஜதந்திரம் என அரசியல் நிபுணர்கள் கூறி வரும் சூழலில், வெளியுறவு கொள்கை நிபுணர் ராஜா மோகன், இவ்வாறு எச்சரித்துள்ளார்.






      Dinamalar
      Follow us