தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/'இண்டியா' கூட்டணி திணறல் பா.ஜ., - எம்.எல்.சி., கருத்து

'இண்டியா' கூட்டணி திணறல் பா.ஜ., - எம்.எல்.சி., கருத்து

'இண்டியா' கூட்டணி திணறல் பா.ஜ., - எம்.எல்.சி., கருத்து


ADDED : பிப் 14, 2024 05:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2024 05:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கொப்பால் : ''தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள, இண்டியா கூட்டணி திணறுகிறது,'' என பா.ஜ., - எம்.எல்.சி., ரகுநாத்ராவ் மல்காபுரே தெரிவித்தார்.

கொப்பாலில், மாவட்ட பா.ஜ., தேர்தல் அலுவலகத்தை, பா.ஜ., - எம்.எல்.சி.,யும், தொகுதி பொறுப்பாளருமான ரகுநாத்ராவ் மல்காபுரே நேற்று திறந்து வைத்தார்.

பின், அவர் கூறியதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான 10 ஆண்டு பா.ஜ., அரசின் சாதனைகளையும்; அதற்கு முந்தைய மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி சாதனைகளையும் மக்கள் ஒப்பிட்டு பார்க்கின்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள, இண்டியா கூட்டணி திணறுகிறது. தன்னுடைய செயல்பாடுகளால், தொடர்ந்து காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்து வருகிறது. கொப்பால் எம்.பி., கரடி சங்கண்ணா, 1-0 ஆண்டுகளில் பல்வேறு வளர்ச்சி பணிகளை செய்துள்ளார்.

யார் வேட்பாளர் என்பதை, தொண்டர்களிடம் ஆலோசித்து, கட்சி மேலிடம் அறிவிக்கும். லோக்சபா தேர்தலை சந்திக்க பா.ஜ., தயாராக உள்ளது.

காங்கிரசின் வாக்குறுதி திட்டங்களால் எந்த பயனும் இல்லை. மக்கள் கண்ட கனவு நனவாகவில்லை. இதனால் அரசு மீது மக்கள் கொந்தளிப்பில் உள்ளனர்.

பா.ஜ., திட்டங்களுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. கொப்பால் உட்பட மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வெற்றி பெறுவது உறுதி.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us