ADDED : ஆக 21, 2026 11:05 PM

புதுடில்லி: ஜம்மு காஷ்மீர் குறித்த அமெரிக்க தூதரின் கருத்தால் பாகிஸ்தான் விரக்தி அடைந்துள்ளது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வால் கூறியுள்ளார்.
இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் சமீபத்தில் ஜம்மு காஷ்மீர் சென்று முதல்வர் உமர் அப்துல்லாவை சந்தித்து பேசினார். இதன் பிறகு செர்ஜியோ கோர், '' ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான அங்கம்,''என கருத்து தெரிவித்து இருந்தார்.இதன் பிறகு, பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை வரவழைத்த பாகிஸ்தான் அரசு, செர்ஜியோ கோர் கருத்துக்கு அதிருப்தி தெரிவித்து இருந்தது.
டில்லியில் இன்று ( ஆக.,21) நிருபர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரந்தீர் ஜெயிஸ்வாலிடம் இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.இதற்கு அவர் அளித்த பதில்,'' ஜம்மு காஷ்மீரும், லடாக்கும், இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதிகள். அது அப்படியே தொடரும். பாகிஸ்தானின் விரக்திக்கு கருத்து சொல்வதற்கு எந்த காரணமும் இல்லை. இதனை தான் நான் சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
