டியூஷன் ஆசிரியரை கொல்ல நாட்டு வெடி வீசியவர் சிக்கினார்
டியூஷன் ஆசிரியரை கொல்ல நாட்டு வெடி வீசியவர் சிக்கினார்
ADDED : ஆக 21, 2026 11:27 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த பிரேம்குமார், 35, லாஸ்பேட்டையில் டியூஷன் சென்டர் நடத்துகிறார். நேற்று முன்தினம் இரவு, அவர் மீது, பைக்கில் வந்த நபர், நாட்டு வெடி எடுத்து வீச முயன்றபோது வெடித்து, வீச முயன்றவரின் கை சேதமானது. லாஸ்பேட்டை போலீசார், அவரை ஜிப்மரில் அனுமதித்தனர்.
விசாரணையில், வெடியை வீசியது, ரெட்டியார்பாளையத்தைச் சேர்ந்த ரவீந்திரன் என, தெரியவந்தது. இவரது மகள், பிரேம்குமார் டியூஷன் சென்டரில், இரு ஆண்டுகளுக்கு முன் படித்துள்ளார். அப்போது, ரவீந்திரன் மனைவி, பிரேம்குமாரிடம் பேசி வந்துள்ளார். சந்தேகமடைந்த ரவீந்திரன், மனைவியை பிரிந்து வாழ்ந்தார். தன் மனைவியை பிரிய பிரேம்குமார் தான் காரணம் என நினைத்த ரவீந்திரன், அவர் மீது நாட்டு வெடியை வீசி கொல்ல முயன்றது தெரியவந்தது.
