ADDED : ஆக 21, 2026 11:34 PM

இரண்டு படங்கள் சேர்க்கவும்: புதுச்சேரி: ஏ.எப்.டி., மில்லில் அமைய உள்ள ஏக்தா மாலில், தொழிமுனைவோர் தயாரிக்கும் பொருட்களை சந்தை படுத்த பெரிய அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி பேசினார்.
புதுச்சேரி தொழில் மேம்பாட்டு கழகம் (பிப்டிக்) மற்றும் அகமாதபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், மத்திய குறு, சிறு மற்றும் நடுத்தர மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் உணவு மற்றும் கடற்கரை திருவிழா நேற்று துவங்கியது.
கடற்கரை சாலை காந்தி திடலில் நடந்த விழாவில், தொழில் துறை செயலர் விக்ராந்த்ராஜா வரவேற்றார். கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குனர் ஜெனரல் சுனில்சுக்லா ‘மேட் இன் புதுச்சேரி’ குறித்து பேசினார். தொடர்ந்து ‘மேட் இன் புதுச்சேரி’ அதிகாரபூர்வ துவக்கம் மற்றும் அதன் ட்ரோன் வாயிலாக லோகோ வெளியிடப்பட்டது.
விழாவில் முதல்வர் ரங்கசாமி பேசிதாவது:
புதுச்சேரி தொழில் வளர்ச்சியில் இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பான்பே ‘மேட் இன் புதுச்சேரி’ ஒரு மைகல். புதுச்சேரியில் தனி நபர் வருமானம் ரூ. 3 லட்சத்து 6 ஆயிரத்து 19 ஆகும். இதற்கு முக்கிய காரணம் சிறு, குறு, நடுத்தர தொழிற்சாலைகளாகும். இந்த தொழில்கள் செய்ய 1 லட்சத்து 16 பேர் பதிவு செய்துள்ளனர். மத்திய அரசின் ஊக்க தொகை மூலம் புதிய தொழில் துவங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருகிறார்கள். சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை மூலம் வரும் வாருவாய் அதிகரிக்க நடவிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி வளர்ச்சியடைந்த சிறிய மாநிலம். பல புதிய தொழிற்சாலை கொண்டு வர தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்.
ஏ.எப்.டி., மில்லில், ஏக்தா மால் திட்டத்தில், கைவினை பொருட்கள் காட்சிபடுத்த ஏற்பாடுகள் நடக்கிறது. அங்கு தொழில்முனைவோர்கள் தயாரிக்கும் பொருட்கள் சந்தைபடுத்த பெரிய அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
படித்த இளைஞர்கள், தொழில் அதிபர்களாகவும், தொழில்முனைவோர்களாகவும் உருவாக்க நிதி, கடன் உதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தொழில் கூட்டமைப்பு சேர்மன் நடராஜன், அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலர் சரத் சவுகான், விக்னேஷ் எம்.எல்.ஏ., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.
