ADDED : ஆக 21, 2026 11:34 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: பனையடிக்குப்பம் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியினை அமைச்சர் ராஜவேலு துவக்கி வைத்தார்.
பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதி, பனையடிக்குப்பம் ஒத்தவாடை தெருவிற்கு ரூ. 12.78 லட்சம் செலவில் சிமென்ட் சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்கான பணியினை அமைச்சர் ராஜவேலு பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இதேபோல் ரூ. 20 லட்சம் செலவில் கரையாம்புத்துார் கிருஷ்ணா நகர், கணபதி நகரில் சாலை அமைக்கும் பணிகளையும், கரையாம்புத்துார் பேட் சாலைகள் மேம்பாட்டு பணிகளையும் அமைச்சர் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சதாசிவம், இளநிலை பொறியாளர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
