தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தொழில்முனைவோர் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை

தொழில்முனைவோர் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை

தொழில்முனைவோர் தங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் கவர்னர் கைலாஷ்நாதன் அறிவுரை


ADDED : ஆக 21, 2026 11:34 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 11:34 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: தொழில்முனைவோர்கள் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி நுார்வோர்களின் தேவைகளுக்கேற்ப தங்களை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.

கடற்கரை சாலையில் நடந்த ‘மேட் இன் புதுச்சேரி’ லோகோ வெளியிடும் விழாவில் அவர், பேசியதாவது:

பாண்பேய்ட் மேட் இன் புதுச்சேரி என்ற அறிமுகம், புதுச்சேரியின் தனி தன்மையை அதன் தயாரிப்புகள் மூலம் வெளிப்படுத்தும் முயற்சியின் துவக்கம். இந்தியாவில் புதுச்சேரிக்கு வரலாறு, பாரம்பரியம், கட்டட கலை, கலாசாரம், சுற்றுலா என ஒரு தனி அடையாளம் உள்ளது. அந்த அடையாளத்தோடு, உற்பத்தி திறன் மற்றும் தொழில் முனைவோர் தங்கள் திறனையும் இணைத்து காட்ட வேண்டும்.

‘மேட் இன் புதுச்சேரி’ மூலம் தயாரிக்கப்படும் பொருட்கள் தரமானது என்ற நம்பிக்கை நுகர்வோர்களுக்கு ஏற்பட வேண்டும். தயாரிப்புகளின் தரம், வடிவம், புதுமை, நுகர்வோர் அனுபவம் அனைத்திலும், உயர்ந்த நிலையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

‘மேட் இன் புதுச்சேரி’ என்ற முத்திரையோடு வெளிவரும் தயாரிப்புகளில் புதுச்சேரி பெயரையும் தன்னுடன் எடுத்து செல்கிறது என்பதை தொழில்முனைவோர் நினைவில் கொள்ள வேண்டும். நாம் உலகளவில் மிகவும் போட்டி நிறைந்த சந்தை சூழலில் உள்ளோம்.

எனவே, புதுச்சேரியின் தயாரிப்புகள் மற்ற தயாரிப்புகளிலிருந்து தனித்து நிற்க வேண்டும். புதுமை, தரம் இரண்டும் முயற்சியின் அடித்தளாக இருக்க வேண்டும். தொழில்முனைவோர்கள், புதிய தொழில்நுட்பங்களை ஏற்படுத்தி, நுகர்வோர் தேவைகளுக்கு ஏற்பட மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

சுற்றுசூழல் பாதிக்காத உற்பத்தி முறைகள், மூலதனங்களை பொறுப்போடு பயன்படுத்துவதில் புதுச்சேரி முன்னுதாரணமாக உருவாக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us