ADDED : ஆக 21, 2026 11:34 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து மாணவர்கள் நேற்று இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் நிதி மேலாண்மை கையாளுவதில் தவறு நடந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏ.பி.வி.பி., அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பல்கலைக் கழக துணை வேந்தர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று முன்தினம் துவங்கிய இந்த ஆர்ப்பாட்டம், நேற்று இரண்டாவது நாளாக நீடித்தது.
ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரி பல்கலைக்கழக நிர்வாக உருவ பொம்மையை எரித்தனர். பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி கோஷங்கள் எழுப்பட்டது.
